மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் அஜித்…
24 மார்கழி 2024 செவ்வாய் 14:06 | பார்வைகள் : 174
நடிகர் அஜித் கடைசியாக ஹெச். வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் கமிட்டானார் அஜித். அதன்படி படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
மேலும் விடாமுயற்சி படமானது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் அஜித், மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் அஜித்... லேட்டஸ்ட் அப்டேட்!இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நடிகர் அஜித், சிறுத்தை சிவா உடன் ஐந்தாவது முறையாக கூட்டணி அமைக்கப் போகிறார் என தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தான் நடிகர் அஜித், மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. அதாவது ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி படத்தை முடித்துவிட்டு மார்க் ஆண்டனி 2 திரைப்படத்தை இயக்க இருந்தாராம்.
அப்பொழுதுதான் அஜித்திடமிருந்து அழைப்பு வந்ததும் குட் பேட் அக்லி படத்தை இயக்க சென்றாராம்.மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் அஜித்... லேட்டஸ்ட் அப்டேட்!நடிகர் விஷாலும் அஜித் படத்தை முடித்துவிட்டு வாங்க. அதன் பின்னர் மார்க் ஆண்டனி 2 எடுப்போம் என்று சொன்னாராம். இப்போது குட் பேட் அக்லி படத்தை எடுத்து முடித்த ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்தது விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி 2 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். எனவே இந்த படத்தை முடித்த பிறகு மீண்டும் அஜித் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.