ஈஃபிள் கோபுரத்தில் இருந்து 1,200 பேர் வெளியேற்றம்!
24 மார்கழி 2024 செவ்வாய் 16:36 | பார்வைகள் : 2068
ஈஃபிள் கோபுரத்தில் உள்ள மின் தூக்கியில் திடீரென மின் கசிவு ஏற்பட்டதை அடுத்து, 1,200 பேர் வெளியேற்றப்பட்டனர்.
காலை 11 மணிக்கு சற்று முன்னதாக தீ எச்சரிக்கை மணி எழுப்பப்பட்டது. அதை அடுத்து பார்வையாளர்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பாரம் தூக்கியில் உராய்வு ஏற்பட்டு தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் ஈஃபிள் கோபுரம் நண்பகல் 12.15 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.