Chido புயல்.. பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு..!
24 மார்கழி 2024 செவ்வாய் 17:43 | பார்வைகள் : 831
Mayotte தீவினை தாக்கிய Chido புயலில் பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்வடைந்துள்ளது.
டிசம்பர் 14, சனிக்கிழமை குறித்த Chido பெரும் புயல் Mayotte தீவினை சூறையாடியிருந்தது. பிரதமர் பிரான்சுவா பெய்ரு, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.
இந்நிலையில், இரு நாட்கள் முன்பு வரை 32 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 39 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.