Paristamil Navigation Paristamil advert login

திராவிட கட்சிகள் ஆட்சியில் தினந்தோறும் கொடுமை: கம்யூ.,

திராவிட கட்சிகள் ஆட்சியில் தினந்தோறும் கொடுமை: கம்யூ.,

25 மார்கழி 2024 புதன் 05:45 | பார்வைகள் : 4420


பட்டியலின மக்களுக்கு தினந்தோறும் கொடுமைகள் நடக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்வதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் அரை நுாற்றாண்டுக்கும் மேலாக, ஈ.வெ.ரா., வழி வந்த திராவிட கட்சிகள்தான் ஆட்சி செய்கின்றன. ஆனாலும், இந்தியாவிலேயே ஆணவ கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக, தமிழகம் உள்ளது. பட்டியலின மக்களுக்கு தினந்தோறும் கொடுமைகள் நடக்கும் மாநிலமாக, தமிழகம் திகழ்கிறது.

ஜாதிய உணர்வுகளும், ஜாதிய அணி சேர்க்கைகளும் கொடி கட்டும் பறக்கும் மாநிலமாக, தமிழகம் உள்ளது. அரை நுாற்றாண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில், ஈ.வெ.ரா.,வின் கொள்கைகள் படிப்படியாக கைவிடப்பட்டு வருகின்றன என்பதைத் தான் இது காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்