சூரியனுக்கு மிக அருகில் நெருங்க முயற்சிக்கும் நாசா விண்கலம்
25 மார்கழி 2024 புதன் 08:20 | பார்வைகள் : 119
நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் (Parker solar probe) என்ற விண்கலம் சூரியனைக் கடந்து மணிக்கு 435,000 மைல் வேகத்தில் செல்லவுள்ளது.
இது லண்டனில் இருந்து நியூயோர்க்கிற்கு 29 வினாடிகளில் பயணிக்கும் வேகம் ஆகும்.
ஆளில்லா விண்கலம் சூரியனில் இருந்து 3.8 மில்லியன் மைல் தொலைவில், சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் கொரோனா என்ற வெளி மண்டலத்தில் பயணிக்கும்.
சூரியனுக்கு மிக அருகில் நெருங்க முயற்சிக்கும் நாசா விண்கலம் | Nasa Spacecraft Attempts To Get Closest To The Sun
இதனால், விண்கலத்தின் வெப்பநிலை வெப்பநிலை 1,400 செல்சியஸ் ஆக உயரும் என்றும் அதன் எலக்ட்ரானிக்ஸ் கடுமையான வெப்பத்தால் அழிக்கப்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
விண்கலம் சூரியனை அண்மித்து கடந்து சென்றதும், அதன் நிலை குறித்து அறிவதற்கு விஞ்ஞானிகள் டிசம்பர் 27 அன்று வரை காத்திருப்பார்கள்.
விண்கலம் சூரியனை நன்கு புரிந்துகொள்ள உதவும் ஒரு பெரிய அளவிலான தரவுகளை அனுப்பும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.