Paristamil Navigation Paristamil advert login

மத்திய தரைக் கடலில் மூழ்கிய ரஷ்ய ராணுவத்தின் சரக்கு கப்பல் - மாலுமிகள் 14 பேர் மீட்பு! 

மத்திய தரைக் கடலில் மூழ்கிய ரஷ்ய ராணுவத்தின் சரக்கு கப்பல் - மாலுமிகள் 14 பேர் மீட்பு! 

25 மார்கழி 2024 புதன் 08:36 | பார்வைகள் : 560


ரஷ்ய சரக்கு கப்பலான உர்சா மேஜர்(Ursa Major) என்ற சரக்கு கப்பல் ஸ்பெயின் மற்றும் அல்ஜீரியா இடையேயான சர்வதேச நீரில் பழுதடைந்து கடலில் மூழ்கியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

கப்பலில் இருந்த 14 குழு உறுப்பினர்கள் மீட்கப்பட்ட நிலையில், இரண்டு பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ஜின் அறையில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ஜின் அறையில் வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

சம்பவ இடத்துக்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் குழுக்கள் விரைந்து வந்தனர், அத்துடன் மீட்பு பணியிலும் ஈடுபட்டனர்.

ரஷ்ய பாதுகாப்பு நிறுவனமான ஒபோரோன்லோஜிஸ்டிகாவுக்கு சொந்தமான இந்த கப்பல், சிரியாவுக்கு இராணுவ உபகரணங்களை கொண்டு செல்வதில் ஈடுபட்டதாக கூறப்படுவதால், 2022 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க தடைகளுக்கு உட்பட்டிருந்தது.

சிரியாவிலிருந்து ரஷ்ய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை கொண்டு செல்ல உர்சா மேஜர் பயன்படுத்தப்பட்டது என்று உக்ரைனிய ஊடகங்கள் முன்னதாக தெரிவித்திருந்தன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்