அவதானம்.. குடிதண்ணீரை வைத்து மோசடி!
25 மார்கழி 2024 புதன் 09:57 | பார்வைகள் : 1995
வீட்டுக்கு விநியோகமாகும் குழாய் நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என தொலைபேசி வழியாக தகவல் வந்தால், மக்கள் குழம்பத்தேவையில்லை. அது ஒரு மோசடி செய்தியாகும்.
தண்ணீர் விநியோகம் தொடர்பில் உள்ளூர் நகரசபையோ அல்லது காவல்துறையினரோ அறிவித்தல் வெளியிடாமல், வேறு யாரேனும் தகவல் வழங்கினால்.. அது தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுத்தப்படுகிறது.
என்ன நடக்கிறது..??
தண்ணீர் சுத்திகரிக்கும் கருவிகளை விற்பனை செய்யும் சில நிறுவனங்கள், தங்களது பொருட்களை விற்பனை செய்ய, இது போன்ற ஒரு நூதன விளம்பரங்களில் ஈடுபடுகின்றனர். குழாய் தண்ணீரை சுத்தமற்றது என நம்ப வைத்து அவர்களிடம் தங்களது தண்ணீர் வடிகட்டி இயந்திரத்தை விற்பனை செய்கின்றனர்.
ஆனால் அப்படி எதுவும் இல்லை எனவும், குழாய் தண்ணீர் மிகவும் தூய்மையானது எனவும், மோசடிக்காரர்களின் வார்த்தைகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.