முந்தைய அளவுகள் அனைத்தையும் முறியடித்த மழை.. பரிசில் பதிவு!!
25 மார்கழி 2024 புதன் 10:07 | பார்வைகள் : 1276
2024 ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் ஒருவாரம் உள்ள நிலையில், முந்தைய அளவு மழைவீழ்ச்சி அனைத்தையும் முறியடிக்கும் அளவுக்கு இவ்வருடம் பரிசில் மழை கொட்டித்தீர்த்துள்ளது.
2000 ஆம் ஆண்டு பரிசில் 900.8 மில்லிமீற்றர் மழை பெய்திருந்தது. 2024 ஆம் ஆண்டில் இதுவரை 900.9 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளது.
நிலம் இதுவரை இல்லாத அளவு ஈரலிப்பாக இருந்ததாக Meteo France தெரிவித்துள்ளது.