இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 8747 சாரதிகள் கைது

25 மார்கழி 2024 புதன் 11:36 | பார்வைகள் : 4180
இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் எப்பாகத்திலும் பாரிய விபத்துக்கள் இடம்பெறவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகள் உட்பட, வீதி சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 8,747 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
இவர்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகளும், கவனக்குறைவு மற்றும் அபாயகரமாக வாகனங்களை செலுத்திய 81 சாரதிகளும், அதிவேகமாக வாகனங்களை செலுத்திய 128 சாரதிகளும், வீதிச் சட்டத்திட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகளின் கீழ் 1,368 சாரதிகளும், சாரதி அனுமதிப்பத்திரங்களில் இருந்த தவறுகள் காரணமாக 615 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுபோதையில் வாகனத்தை செலுத்தாமல், வீதிச் சட்டத்திட்டங்களை முறையாக கடைப்பிடிக்குமாறும் பொலிஸ் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1