Paristamil Navigation Paristamil advert login

ஆப்கானிஸ்தான் மீது  வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்.....

ஆப்கானிஸ்தான் மீது  வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்.....

25 மார்கழி 2024 புதன் 15:29 | பார்வைகள் : 649


ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில்  பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 15 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதில், ஒரே குடும்பத்தின் 5 உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த வான்வழித் தாக்குதலால், லமன் மற்றும் முர்க் பஜார் உட்பட ஏழு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு, வஜிரிஸ்தானி அகதிகள் உட்பட பொதுமக்களை முதன்மையாக பாதித்ததாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


அவர்களில் பலர் முந்தைய இராணுவ நடவடிக்கைகள் காரணமாக பாகிஸ்தானின் பழங்குடிப் பகுதிகளில் உள்ள தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், "இந்த தாக்குதலை சர்வதேச கொள்கைகளை மீறும் மற்றும் தெளிவான ஆக்கிரமிப்பை உருவாக்கும் காட்டுமிராண்டித்தனமான செயல்" என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று தலீபான்களின் பாதுகாப்பு அமைச்சகம் சூளுரைத்துள்ளது. அதோடு, நிலம் மற்றும் இறையாண்மையை பாதுகாப்பது தங்களுடைய சட்ட உரிமை என்று கூறியுள்ளது.    

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்