Paristamil Navigation Paristamil advert login

Bondy : கூட்டத்தினர் மீது துப்பாக்கிச்சூடு.. ஒருவர் காயம்!!

Bondy : கூட்டத்தினர் மீது துப்பாக்கிச்சூடு.. ஒருவர் காயம்!!

25 மார்கழி 2024 புதன் 19:06 | பார்வைகள் : 7815


கூட்டத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட சரமாரி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று டிசம்பர் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை Bondy (Seine-Saint-Denis), நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. rue Jean Lebas வீதியில் வாகனம் ஒன்றில் காத்திருந்த சிலரை நோக்கி, இரவு 9.50 மணி அளவில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்த RATP பேருந்து சாரதி ஒருவர் காவல்துறையினரை அழைத்துள்ளார். அதை அடுத்து SDPJ 93 படைப்பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

காயமடைந்த நபர் Blanc-Mesnil மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்