ஓடும் தொடருந்தில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சாரதி!!

26 மார்கழி 2024 வியாழன் 08:00 | பார்வைகள் : 6716
இரு நாட்கள் முன்பாக Seine-et-Marne மாவட்டத்தில் தொடருந்து போக்குவரத்து தாமதமாகியிருந்தது. பணிகள் இரண்டுமணிநேரமாக தொடருந்துக்குள் சிக்கியிருந்ததுடன், பல ஆயிரக்கணக்கான பயணிகள் தொடருந்து இல்லாமல் நிலையங்களில் தவித்து நின்றனர்.
இச்சம்பவத்துக்கு காரணம், தொடருந்து சாரதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதேயாகும். Crisenoy (Seine-et-Marne) நகரில் பயணித்துக்கொண்டிருந்த தொடருந்தின் சாரதி ஒருவர், திடீரென அவரது கட்டுப்பாட்டு அறையில் இருந்து வெளியே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
பரிசில் இருந்து லியோன் நோக்கி பயணித்த குறித்த TGV தொடருந்தின் சாரதி Bruno Rejony என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கட்டுப்பாட்டு அறைக்குள் இருந்து சாரதி வெளியே குதித்ததும், தொடருந்தில் உள்ள தானியங்கி பாதுகாப்பு தொழில்நுட்பம் செயற்பட்டு தொடருந்தை நிறுத்தியுள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.
அதேவேளை, சாரதி பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1