உக்ரேனின் சிறந்த முத்திரைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள விவாதம்....!
26 மார்கழி 2024 வியாழன் 08:19 | பார்வைகள் : 426
உக்ரைனின் சிறந்த முத்திரைகளில் ஒன்று அதிக விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனின் முத்திரையில் ஒரு சிப்பாய் தனது நடுவிரலை ரஷ்ய போர்க்கப்பலுக்கு உயர்த்துவதை சித்தரிக்கிறது.
குறித்த போர்க்கப்பல் முத்திரை வெளியிடப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் உக்ரேனியர்களால் மூழ்கடிக்கப்பட்டது, மேலும் ஒரு வாரத்தில் முத்திரைகள் விற்றுத் தீர்ந்தன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முத்திரை குறித்து கருத்து தெரிவித்த உக்ரைனின் தபால் நிறுவனமான Ukrposhtaவின் தலைவர் Ihor Smilyansky, இது மிகவும் அவதானம் மிக்க நடவடிக்கை என்று கூறியுள்ளார்.
“இது என் முடிவு. நான் சொன்னேன், எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்பது எனக்கு கவலையில்லை. இது சரியான செயல் என்று நான் நம்புகிறேன் என அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு செய்திகளின்படி, Ukrposhta சுமார் எட்டு மில்லியன் முத்திரைகளை விற்பனை செய்துள்ளது. அவற்றில் உக்ரைனில் கண்ணிவெடி தேடும் நாயின் பிரபலமான படம் உள்ளது. இந்த முத்திரை சுமார் 500,000 டொலர்கள் (£400,000) பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மொத்த வருமானத்தில் 80% கண்ணிவெடி அகற்றும் உபகரணங்களுக்காகவும் மீதமுள்ளவை விலங்குகள் தங்குமிடங்களுக்காகவும் செலவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவுடனான போரின் போது உக்ரைனின் மன உறுதியைப் பேணுவதில் Ukrposhta வின் முத்திரைகள் முக்கியப் பங்காற்றியதாகப் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
உக்ரேனிய முத்திரைகளின் தனித்துவமான தன்மை உலகெங்கிலும் உள்ள தபால்தலை சேகரிப்பாளர்களிடையே பிரபலமாகியுள்ளது.