ஒன்றாரியோவில் தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

26 மார்கழி 2024 வியாழன் 09:17 | பார்வைகள் : 4927
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நியூ பிரவுன்ஸ்விக் பிராந்தியத்திலும் அதிக அளவு தட்டம்மை நோயாளர்கள் பதிவாகி உள்ளனர்.
இந்த மாத நடுப்பகுதி வரையில் நியூ பிரவுன்ஸ்விக் பிராந்தியத்தில் 37 தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, ஒன்றாரியோவில் சுமார் 10 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் முதல் தட்டம்மை நோயாளர்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நியூ பிரவுன்ஸ்விக்கில் பதிவான நோயாளர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பதின்ம வயது உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தட்டமையின் நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் அனேகமானவர்கள் தட்டம்மை தடுப்பூசி ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காய்ச்சல், செந்நிறத்திலான கண்கள் மற்றும் இருமல் போன்ற நோய் அறிகுறிகள் தென்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பாடசாலைகளிலும் தட்டம்மை நோய் தடுப்பூசி ஏற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1