Paristamil Navigation Paristamil advert login

  கிறீன்லாந்தின் பாதுகாப்பை அதிகரிக்கும் டென்மார்க்...! டிரம்ப் கருத்து...?

  கிறீன்லாந்தின் பாதுகாப்பை அதிகரிக்கும் டென்மார்க்...! டிரம்ப் கருத்து...?

26 மார்கழி 2024 வியாழன் 09:32 | பார்வைகள் : 1250


கிறீன்லாந்தினை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது குறித்து டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து டென்மார்க், கிறீன்லாந்திற்கான பாதுகாப்பை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

டென்மார்க் பிரதமர் ட்ரோல்ஸ் லண்ட் பால்சன் இதனை அறிவித்துள்ளார் அதன்படி கிறீன்லாந்தின் பாதுகாப்பிற்கான நிதிஒதுக்கீட்டில் அதிகரிப்பை செய்யவுள்ளதாக டென்மார்க் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிடவேண்டிய தருணத்தை விதியின் முரண்நகைச்சுவை என அவர் வர்ணித்துள்ளார்.

கிறீன்லாந்தின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்தி இரண்டு கண்காணிப்பு கப்பலல்களையும், இரண்டுநீண்ட தூர ஆளில்லா விமானங்களையும் கொள்வனவு செய்ய முடியும் எனவும் கிறீன்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கிறீன்லாந்தில் அமெரிக்காவின் விண்வெளி தளமொன்று காணப்படுகின்றது. மேலும் வட அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்வதற்கான குறுகிய பாதையில் கிறீன்லாந்து அமைந்துள்ளது.

இதன் காரணமாக கிறீன்லாந்து , அமெரிக்காவிற்கு மூலோபாய அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுவதுடன் இங்குபெரும் கனிமவளங்கள் காணப்படுகின்றன.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்