Paristamil Navigation Paristamil advert login

தள்ளிப்போகும் ‘விடாமுயற்சி’ பட ரிலீஸ்?

தள்ளிப்போகும் ‘விடாமுயற்சி’ பட ரிலீஸ்?

26 மார்கழி 2024 வியாழன் 14:31 | பார்வைகள் : 188


அஜித்தின் 62 வது படமாக விடாமுயற்சி எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் இந்த படம் உருவாகி இருக்கிறது. ஓம் பிரகாஷ் இந்த படத்தில் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்திருக்கிறார்கள். 

மேலும் ஆரவ், ரெஜினா மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். துணிவு திரைப்படம் வெளியாகி ஓராண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில் அஜித்தை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அஜித் இந்த படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். 

இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளனஅடுத்தது நாளை (டிசம்பர் 27) இந்த படத்தின் முதல் பாடல் வெளியாக இருக்கிறது. எனவே இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படமானது 2025 ஜனவரி 9 அல்லது 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இந்த படத்திற்கு தணிக்கை குழு சான்றளிப்பதில் தாமதம் ஏற்பட்டால் இப்படத்தை 2025 ஜனவரி 14-ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்