Seine-Saint-Denis : நான்கு வியாபாரத்தலங்களுக்கு 'சீல்' வைத்த சுகாதாரத்துறை!!
26 மார்கழி 2024 வியாழன் 15:47 | பார்வைகள் : 2833
Seine-Saint-Denis மாவட்டத்தில் உள்ள நான்கு வியாபாரத்தலங்களுக்கு சுகாதாரத்துறையினர் 'சீல்' வைத்து அவற்ற மூடியுள்ளனர்.
93 ஆம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வணிக நிலையங்கள், உணவகங்கள் உள்ளிட்ட சில இடங்களை direction départementale de la protection des populations (DDPP) அதிகாரிகள் சோதனையிட்டனர்.
Montreuil நகரில் உள்ள El Baraka உணவகம், Gagny நகரில் உள்ள Bakaba Spicy உணவகம் போன்றவற்றில் சுகாதார சீர்கேடுகள் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது.
Montreuil நகரில் உள்ள MK Supermarché (பல்பொருள் அங்காடி) Aubervilliers நகரில் உள்ள Saint-Émilion உணவகம் போன்றவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சுகாதார நிலமைகளை சீர் செய்துவிட்டு அதன்பின்னர் அவர்கள் சோதனையிடப்பட்டு, மீண்டும் அவர்களது வணிக தலங்களை திறக்கமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.