தொற்றுநோய் பிரான்சில் அதிகரித்துள்ளது அவதானம். பொது சுகாதார அமைப்பு.
27 மார்கழி 2024 வெள்ளி 08:09 | பார்வைகள் : 2451
பிரான்சில் அண்மைக்காலமாக 'grippe' எனப்படும் காய்ச்சல் சோர்வு, இருமல், தலைவலி, வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும் தொற்றுநோய் அதிகரித்துள்ளது எனவே பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு, பொது சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
முக கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், அதிகப்படியான சந்திப்புக்களை தவிர்த்தல் போன்றவற்றோடு தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
'grippe' பலவேளைகளில் சாதாரணமான காய்ச்சல் போல் வந்து போனாலும் சிலவேளைகளில் அது பெரும் ஆபத்தான நோயாகவும் மாறிவிடுகிறது. பிரான்சில் 'grippe' தொற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளாகி சாவடைபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 10,000 அதிகமாகவே உள்ளது. இதில் 90% வீதம் பாதிக்கப்படுபவர்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.