Paristamil Navigation Paristamil advert login

காவல்துறையின் விசாரணை காலத்தை 72 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும். Gérald Darmanin

காவல்துறையின் விசாரணை காலத்தை 72 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும். Gérald Darmanin

27 மார்கழி 2024 வெள்ளி 08:12 | பார்வைகள் : 1562


புதிய நீதி அமைச்சர் Gérald Darmanin நேற்று TF1 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் "குற்றவாளிகளை கைதுசெய்து காவல்துறையினர் விசாரணைகளை முடித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் கால அவகாசம் இப்போது 48 மணி நேரமாக இருக்கிறது.  இது காவல்துறையினருக்கு போதுமான கால அவகாசமாக இல்லை இதனை 72 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

தனது மனைவியை போதைவஸ்து அருந்தவைத்து தானும், தன் சகாக்கள் 50 பேரும் நீண்ட நாட்களாக தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவு செய்து வந்த, மனைவி Mazan Pelicot மற்றும் கணவர் Dominique Pelicot வழக்கின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு குறித்து பேசும்போதே நீதி அமைச்சர் மேற்குறிப்பிட்ட கால அவகாசம் நீட்டிப்பு பற்றிய தன் எண்ணத்தை தெரிவித்தார்.

பாலியல் வன்முறை மற்றும் பெண் கொலை வழக்குகளில் காவல்துறை அதிகாரிகள் தெளிவான விசாரணையை மேற்கொண்டு சரியான குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி அவர்களுக்கான தண்டனையை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்