இஸ்ரேல் தாக்குததலில் நூலிழையில் உயிர் தப்பிய உலக சுகாதார ஸ்தாபன தலைவர்....!
27 மார்கழி 2024 வெள்ளி 10:07 | பார்வைகள் : 629
ஏமனின் தலைநகர் சனா சர்வதேச விமான நிலையத்தில் 26 ஆம் திகதி இஸ்ரேல் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்லையில், இந்த தாக்குதலில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இஸ்ரேல் , பாலஸ்தீனம் மீது நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஐ.நா ஊழியர்களை விடுவிப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தவும், ஏமனில் சுகாதர மற்றும் மனிதாபிமான நிலைமையை மதிப்பிடுவதற்கும் சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தலைமையிலான குழு ஏமன் சென்றது.
அங்கு பணிகளை முடித்து நேற்றையதினம் (26) சனாவில் குறித்த குழுவினர் விமானம் ஏற இருந்தபோது அங்கு இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியிருந்தது.
இந்த தாக்குதலில் சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தலைமையிலான குழுவினர் நூலிழையில் உயிர் தப்பியதாக கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.