பரிஸ் : மெற்றோ தண்டவாளத்தில் குதித்த நபர் படுகாயம்!

27 மார்கழி 2024 வெள்ளி 17:48 | பார்வைகள் : 7279
நபர் ஒருவர் மெற்றோ தண்டவாளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று டிசம்பர் 26, வியாழக்கிழமை இச்சம்பவம் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள métro Convention நிலையத்தின் 12 ஆம் இலக்க மெற்றோவுக்காக காத்திருந்த ஒருவர், திடீரென தண்டவாளத்தில் பாய்ந்துள்ளார். அதை அடுத்து மெற்றோ அவர் மீது மோதியது. இதில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார். பிற்பகல் 2.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு Georges-Pompidou European மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
சம்பவத்தை அடுத்து மாலை 4.30 மணி வரை போக்குவரத்து தடைப்பட்டது.
முன்னதாக டிசம்பர் மாத நடுப்பகுதியில் Charles-de-Gaulle Étoile நிலையில் வைத்து 29 வயதுடைய பெண் ஒருவர் தொடருந்தில் பாய்ந்து தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1