Brexit : பிரித்தானியாவுடனான வர்த்தகம் 20% சதவீதத்தால் சரிந்தது!!

28 மார்கழி 2024 சனி 07:00 | பார்வைகள் : 3611
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதன் பின்னர், அந்நாட்டுடனான பிரெஞ்சு வர்த்தகம் 20% சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியது. ஆனா அதற்கு முன்பாகவே பல தரப்பட்ட முன்னேற்பாடுகள் செய்துகொண்டிருந்தது. 2018 ஆம் ஆண்டில் இருந்து 2023 ஆம் ஆண்டு வரையான ஐந்து ஆண்டுகளில் வருடத்துக்கு 2.5 பில்லியன் வர்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேவேளை, ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிந்தவுடன், தனது வர்த்தகத்தை உடனடியாக ஒன்றியத்தில் இல்லாத நாடுகளை நோக்கி திருப்பியது.
பிரான்சுடனான வர்த்தகத்தில் ஓட்டோமொபைல்கள் துறை மட்டும் தப்பிப்பிழைத்துள்ளன. விமான விற்பனைகள், இயந்திரங்கள், மகிழுந்துகள் போன்ற வர்த்தகங்கள் பிரித்தானியாவுடன் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.