காவல்துறை வீரர் தற்கொலை.. இவ்வருடத்தில் 16 ஆவது சம்பவம்!!
28 மார்கழி 2024 சனி 16:00 | பார்வைகள் : 1619
நேற்று டிசம்பர் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை CRS காவல்துறை வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவ்வருடத்தில் இடம்பெற்ற 16 ஆவது தற்கொலை இதுவாகும்.
Plombières-lès-Dijon (Côte-d'Or) நகரில் பணிபுரியும் CRS 40 படைப்பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது வீட்டில் அவர் வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டார். அவரது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி, தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார்.
ஜொந்தாமினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.