மறைந்து போன அந்த மாதரசியின் நிறைநாள் இறுதிப் பயணம்...

28 மார்கழி 2024 சனி 16:53 | பார்வைகள் : 8356
'பாசம் உண்மைதான்..
நேசம் உண்மைதான்..
சாவும் உண்மைதான்..'
மரணத்தை தூரத்தில் இருந்து பார்த்தால் இப்படித்தான் தோன்றும்.
மரணத்தை பக்கத்தில் பார்த்தால் தத்துவம் கண்ணீரில் கரைந்து விடும்..
மரணக் காற்று அடித்த போதிலும் இடிந்து போகவில்லை, தைரியத்தில் தளர்ச்சியில்லை, தன்னில் தள்ளாட்டமும் இல்லை, தடுமாற்றமும் இல்லை அவர்தான் சோதி அண்ணா. (சகாயராஜன்)
சாதாரண முதுகுத்தண்டு சத்திர சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகிறார் அவரின் துணைவியார், (சகாயராஜன் மல்லிகா ) சிகிச்சை முடிந்து கண்விழித்து பார்த்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என சொல்லப்படுகிறது, அதிலிருந்து உடல் அசைவுகள் அற்ற மூளை மட்டும் இயங்கும் கோமா நிலை.. நாட்கள் கடக்க "எந்த நிலையிலும் ஒரு உயிரை காப்பாற்ற முடியும் மூளைச்சாவு காப்பாற்ற முடியாது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்" மருத்துவ சான்றிதழ் அது மரணச் சான்றிதழ்.
சகாயராஜன் மல்லிகா.. நர்ஷிகா, இனோத், பிரவீனா மூன்று பிள்ளைகளின் தாயார், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை அன்றைய வதிவிடமாகவும், பின்னர் பிரான்சில் Bondy நகரில் வசித்து வந்தார்.
தன் இனத்தை மனதில் தாங்கி, தேசியத்தின் உயிரை உள்வாங்கி பாதம் தேயத் தேய நடந்து, ஈழமுரசு பத்திரிகையின் ஒவ்வொரு எழுத்திலும் உட்கார்ந்து அதன் உயரத்துக்காய் இரவு பகலாக உழைத்து வரும் கணவனின் உணர்வுகளை உலர்த்து விடாமல் பாதுகாத்த உயிர் அவர்.
இலக்கியத்தை படைப்பவன் மட்டும் இலக்கியவாதி அல்ல இலக்கியத்தை படிப்பவனும், அதனை பரப்புகின்றவனும் இலக்கியவாதியே அந்த வகையில் எங்களின் சோதி அண்ணாவும் ஒரு சிறந்த இலக்கியவாதியே... அவரின் இதயம் இன்று இடிந்து போய் இருக்கிறது.
மறைந்து போன அந்த மாதரசியின் நிறைநாள் இறுதிப் பயணம்...
திங்கட்கிழமை 30/12/2024 காலை 10:00 இருந்து 11:00 மணிவரை இலக்கம் 01 Rue Gustave Eiffel 94100 Créteil என்னும் முகவரியில் உள்ள Chambre Mortuaires Porte 14 Hôpital Henri Mondor இறுதிப் பார்வைக்கும் வைக்கப்படும்.
பின்னர் 12:00 - 14:30 மணிவரை இலக்கம் 13 Rue Etienne Dolet 93140 Bondy எனும் முகவரியில் உள்ள Église St.Louis de Bondy தேவாலயத்தில் இறுதித் திருப்பலி ஒப்புக்கொண்டுக்கப்படும்.
நிறைவாய் நல்லடக்கம் 14:30 மணிக்கு இலக்கம் 76 Avenue Henri Varagnnat 93140 Bondy எனும் முகவரியில் உள்ள Cimetière Intercommunale மலர்ச்சாலையில் நடைபெறும்.
"அவரின் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும் " என தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை paristamil.com குடும்பத்தாருக்கு தெரிவித்துக் கொள்கிறது.
மேலதிக தொடர்புகளுக்கு அவரின் கணவர் திரு சகாயராஜன் (சோதி) 00 33 6 51 56 55 95