Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகளுக்கான உயர் ஆணையம் - ஜனாதிபதி அறிவிப்பு!!

குழந்தைகளுக்கான உயர் ஆணையம் - ஜனாதிபதி அறிவிப்பு!!

28 மார்கழி 2024 சனி 19:35 | பார்வைகள் : 2423


பிரெஞ்சு சிறுவர்களைப் பாதுகாக்க உயர் ஆணையம் (haut commissariat à l'Enfance) ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

"இளையவர்களின் பாதுகாப்பே எனது அர்ப்பணிப்பின் இதயத்தில் உள்ளது. அடுத்த முப்பது மாதங்களுக்கு அது அப்படியே இருக்கும். எங்கள் நடவடிக்கையைத் தொடரவும் வலுப்படுத்தவும், ஜனவரியில் குழந்தைகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டேன்." என ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

பிரெஞ்சு சிறுவர்கள் வறுமையில் வாழ்வது அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதை அடுத்தே இந்த பாதுகாப்பு உயர் ஆணையம் உருவாக்கப்பட உள்ளது.

2025 ஆம் ஆண்டின் ஜனவரியில் இது ஆரம்பிக்கப்பட உள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்