காஸாவுக்கு பாரிய மனிதாபிமான உதவியை அனுப்ப வலியுறுத்தும் ஜனாதிபதி மக்ரோன்!
29 மார்கழி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 869
காஸாவுக்கு பாரிய அளவிலான மனிதாபிமான உதவிகளை அனுப்புமாறு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்..
டிசம்பர் 27 வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மக்ரோன் ஜோர்தானின் மன்னர் இரண்டாம் அப்தல்லாவுடனும், ( roi de Jordanie Abdallah II) , பின்னர் நேற்று சனிக்கிழமை எகிப்த்தின் ஜனாதிபதி Abdel Fattah al-Sissi உடன் தொலைபேசி வழியாக உரையாடியிருந்தார். அதன்போது அவ்விருவரிடமும் காஸாவுக்கு தேவையான அவரகால உதவிகளை செய்யுமாறு கோரியிருந்தார். இத்தகவலை நேற்று மாலை எலிசே மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
”காஸாவில் தாங்கிக்கொள்ள முடியாத மனித இழப்புகள் பதிவாகி வருகிறது. பதினைந்து மாத மோதலுக்குப் பிறகு, ஹமாஸ் பிடியில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பது, நீடித்த போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவது மற்றும் மனிதாபிமான உதவிகள் பெருமளவில் காஸாக்களை சென்றடைய அனுமதிப்பது மிகவும் அவசரமானது." என ஜனாதிபதி மக்ரோன் அவர்களிடம் வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.