சிறைச்சாலைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த Gérald Darmanin திட்டம்!
29 மார்கழி 2024 ஞாயிறு 08:00 | பார்வைகள் : 1226
புதிய நீதி அமைச்சராக (ministre de la Justice) பொறுப்பேற்றுள்ள Gérald Darmanin, பிரெஞ்சு சிறைச்சாலைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவர உள்ளதாக தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்துக்காக சிறைவைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகள் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். வேறு கைதிகளுடன் தொடர்பில் இருப்பதால், அவர்கள் மூலம் தகவல்கள் பரிமாறுவதாகவும், ஏனைய குற்றவாளிகளை மூளைச் சலவை செய்யப்படுவது தவிர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு, இந்த தனிமைப்படுத்தல் திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குறுகியகால சிறைத்தண்டனைகளுக்காக புதிய சிறைச்சாலைகள் கட்டப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.