அமெரிக்காவில் டிக்டாக் செயலியின் பயன்பாடு தொடர்பில் டிரம்பின் கருத்து
29 மார்கழி 2024 ஞாயிறு 12:57 | பார்வைகள் : 514
அமெரிக்காவில் தற்பொழுது டிக்டாக் செயலியை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜனவரி மாதம் 20-ம் திகதி பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர்ந்து இயங்குவது குறித்த தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அரிசோனா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது பிரசாரம் அதிக வாக்காளர்களை சென்று சேர்வதற்கு டிக்டாக் செயலி உதவியாக இருந்திருக்கலாம்.
மேலும் சில காலத்திற்கு அந்தச் செயலியை அமெரிக்காவில் தொடர்ந்து இயங்க அனுமதிக்கலாம் என குறிப்பிட்டார்.
இந்நிலையில், டொனால்டு டிரம்ப் சார்பில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை அமெரிக்க அரசின் புதிய சாலிசிட்டர் ஜெனரல் ஜான் சாயர் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், டிக்டாக் செயலியை தடைசெய்யும் உத்தரவை சுப்ரீம் கோர்ட் நிறுத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த டிரம்ப், அதிபராக பதவியேற்ற பிறகு பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரத்திற்கு சுமூக தீர்வு காண முடியும் என நம்புவதாக தெரிவித்தார்