உக்ரைன் போரில் அதிநவீன எப்16 விமானத்தை சுட்டுவீழ்த்திய ரஷ்யா

29 மார்கழி 2024 ஞாயிறு 13:18 | பார்வைகள் : 4605
உக்ரைன் போரில் பயன்படுத்தவென அமெரிக்கா வழங்கிய அதிநவீன எப்16 விமானத்தை சுட்டுவீழ்த்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவிக்கையில்,
ஸபோரிஷியா பகுதியில் பறந்துகொண்டிருந்த எப்-16 விமானமொன்று ரஷ்யாவால் சுட்டுவீழ்த்தப்பட்டது.
அந்தப் பகுதியிலுள்ள ரஷ்ய நிலை மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது அந்த விமானம் அழிக்கப்பட்டது என்று கூறினா்.
இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டால், உக்ரைன் இழந்துள்ள இரண்டாவது எப்-16 போா் விமானம் இதுவாகும்.
முன்னதாக, ரஷ்யாவுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய எப்-16 விமானங்களில் ஒன்று, கடந்த ஓகஸ்ட் மாதம் ரஷ்யா நடத்திய தீவிர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலின்போது விழுந்து நொறுங்கியது. அதிலிருந்த விமானி உயிரிழந்தாா்.
எனினும் அந்த விமானம் விழுந்து நொறுங்கியதற்கு ரஷ்ய ஏவுகணை காரணமல்ல என்று உக்ரைன் தெரிவித்திருந்தது.
தற்போது உக்ரைனின் எப்-16 விமானத்தை தாங்களே சுட்டுவீழ்த்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1