பிரேஸிலில் கிறிஸ்மஸில் கேக் சாப்பிட மூவர் பரிதாபமாக பலி..!

29 மார்கழி 2024 ஞாயிறு 13:56 | பார்வைகள் : 8939
பிரேஸிலில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட கேக்கினை உட்கொண்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த உயிரிழப்புகளை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் குறித்த கேக்கில் ஆர்சனிக் எனப்படும் ஒரு இரசாயண பதார்த்தம் கலந்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஆரம்பத்தில் ஐவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் பிரேஸிலில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் இவர்களில் மூவர் சிசிக்சை பலனின்றி உயிரிழந்தனர் மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் காலாவதியான பல உணவுப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1