கடற்பயணம்.. மூவர் பலி.. பலர் மருத்துவமனையில்!!
29 மார்கழி 2024 ஞாயிறு 14:46 | பார்வைகள் : 1152
கலே பகுதியில் இருந்து பிரித்தானியா நோக்கி படகில் பயணித்த அகதிகளின் படகு கவிழ்ந்ததில் மூவர் பலியாகியுள்ளனர். ஏழு பேர் வரை அவசரப்பிரிவு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இன்று டிசம்பர் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணி அளவில் கடற்படையினர் எச்சரிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து சென்றுள்ளனர். காற்றடிக்கப்பட்ட படகு ஒன்றில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அகதிகள் பயணித்த நிலையில், அவர்களது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கடலில் மூழ்கியவர்களை கடற்படையினஎ தேடி மீட்டனர். 45 நிமிடங்களின் பின்னர் அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டது.
இவ்வருடத்தில் மட்டும் கடற்பயணங்களின் போது உயிரிழந்த அகதிகளின் எண்ணிக்கை 79 ஆக உயர்வடைந்துள்ளது.