Paristamil Navigation Paristamil advert login

சுனில் கவாஸ்கர் காலில் விழுந்து வணங்கிய நிதிஷ் ரெட்டி தந்தை

சுனில் கவாஸ்கர் காலில் விழுந்து வணங்கிய நிதிஷ் ரெட்டி தந்தை

29 மார்கழி 2024 ஞாயிறு 15:27 | பார்வைகள் : 5355


மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களைச் சேர்த்தார்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்களையும், விராட் கோலி 36 ரன்களையும் சேர்த்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த நிதீஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து  இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் ஒன்றுசேர்த்து அசத்தினர்.


இதில் அரைசதம் கடந்து அசத்திய வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களுடன் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த நிதீஷ் ரெட்டி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

இறுதியில் நிதீஷ் ரெட்டி 114 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டனது.  

அதன்பின் தற்போது ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இந்நிலையில்  நிதீஷ் குமாரின் குடும்பத்தினர் அவரை ஹோட்டலில் சென்று சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அப்போது மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நிதிஷ் ரெட்டியின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.  

அப்போது நிதிஷ் ரெட்டியின் தந்தை முத்யாலா ரெட்டி சுனில் கவாஸ்கரின் காலில் விழுந்து வணங்கினார்.

இந்நிலையில் நிதிஷ் ரெட்டியின் குடும்பத்தினர் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் காலில் விழுந்து வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.    

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்