Paristamil Navigation Paristamil advert login

 26 வயதில் மிரட்டும் கால்பந்து வீரர்....!

 26 வயதில் மிரட்டும் கால்பந்து வீரர்....!

30 மார்கழி 2024 திங்கள் 10:19 | பார்வைகள் : 4438


உலகின் அதிக வருமானம் ஈட்டும் கால்பந்து வீரர்களில் இருவரான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோவை மிஞ்சும் சொத்து மதிப்புடன் முன்னாள் செல்சி வீரர் ஒருவர் தாய்லாந்து அணிக்காக விளையாடுகிறார்.

மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருவரும் கால்பந்து உலகில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளனர். பார்சிலோனா, பிஎஸ்ஜி மற்றும் இண்டர் மியாமியுடன் பல கிண்ணங்களை வென்றவர் மெஸ்ஸி.

ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் யுனைடெட், ஜுவென்டஸ் மற்றும் அல்-நாசர் ஆகிய அணிகளுடன் ரொனால்டோவும் வெற்றிகளை குவித்துள்ளார். வெளியான தரவுகளின் அடிப்படையில் மெஸ்ஸியின் சொத்து மதிப்பு 680 மில்லியன் பவுண்டுகள் என்றே தெரியவருகிறது.


இன்னொருபக்கம் ரொனால்டோவின் சொத்து மதிப்பு சுமார் 640 மில்லியன் பவுண்டுகள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரின் சொத்து மதிப்பும் மொத்தமாக 1.32 பில்லியன் பவுண்டுகள் என கூறப்படும் நிலையில், 26 வயதேயான முன்னாள் செல்சி வீரரான Faiq Bolkiah-வின் சொத்து மதிப்பு 16 பில்லியன் பவுண்டுகள் என கூறப்படுகிறது.

புருனே சுல்தானின் மருமகனான இவர், சுல்தானின் மொத்த சொத்து மதிப்பான 200 பில்லியன் பவுண்டுகளில் குறிப்பிடத்தக்க ஒரு தொகையை கைப்பற்றுவார் என்றே கூறுகின்றனர்.

சவுத்தாம்ப்டன், செல்சி மற்றும் லெய்செஸ்டர் சிட்டி ஆகிய அணிகளில் களமிறங்கியிருந்தாலும் பிரீமியர் லீக் களத்தில் அவரால் சாதிக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

2020ல் Maritimo அனிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே களமிறக்கப்பட்டார். பின்னர் தாய்லாந்தின் Chonburi அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு 32 ஆட்டங்களில் களமிறங்கினார்.


2023ல் Ratchaburi அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் பிறந்த Faiq Bolkiah இதுவரை சொந்த நாட்டு அணிக்காக 6 முறை களமிறங்கி ஒரு கோல் அடித்துள்ளார். புருனே நாட்டின் சுல்தானாகும் வரிசையில் 12ம் இடத்தில் இருக்கிறார் Faiq Bolkiah.

5 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்