Paristamil Navigation Paristamil advert login

2024-ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது....

2024-ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது....

30 மார்கழி 2024 திங்கள் 10:23 | பார்வைகள் : 357


ஒவ்வொரு ஆண்டும் ஐசிசி சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது வழங்கி வருகிறது. 

அந்த வகையில் 2024-ம் ஆண்டில் சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி  வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீரர் பும்ரா உள்பட 4 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் பும்ரா, இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், ஹாரி ப்ரூக் ஆகியோரும் இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ்-ம் இந்த பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இப்பட்டியலில் தேர்வாகும் ஒருவருக்கு விருது வழங்கப்படும்.

இந்திய அணியின் பும்ரா இந்த ஆண்டு 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 14.92 சராசரியில் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதேபோல ஜோ ரூட் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 55.57 சராசரியுடன் 1556 ரன்கள் குவித்துள்ளார். ஹார் ப்ரூக் 12 போட்டிகளில் விளையாடி 55.00 சராசரியுடன் 1100 ரன்கள் குவித்துள்ளார்.

இலங்கை வீரர் கமிந்து மெண்டீஸ் 9 போட்டிகளில் விளையாடி 74.92 சராசரியுடன் 1049 ரன்கள் எடுத்துள்ளார்.