Yvelines : பேராசிரியரின் வீட்டை நோக்கி துப்பாக்கிச்சூடு!!
30 மார்கழி 2024 திங்கள் 19:08 | பார்வைகள் : 1457
கல்வி ஆசிரிய ஆலோசகரின் (conseillère principale d’éducation) வீடொன்று துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளது.
Juvisy-sur-Orge (Essonne) நகரில் உள்ள Ferdinand-Buisson கல்லூரிக்கு சொந்தமான குறித்த CPE பேராசிரியர்கள் வசிக்கும் குடியிருப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இதுப்பாக்கிச்சூட்டு இடம்பெற்றுள்ளது. அங்கு பேராசிரியர் ஒருவரும் அவரது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வசித்த நிலையில், அதிஷ்ட்டவசமாக எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
9.20 மணி அளவில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும், அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.