துப்பாக்கி வைத்திருந்தால் இன்று இரவுக்குள் இணையத்தில் பதிவேற்ற வேண்டும்!!
31 மார்கழி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 1433
வேட்டைக்காரர்கள், துப்பாக்கி சுடும் வீரர்கள் போன்றவர்களிடம் துப்பாக்கிகள் இருந்தால், இன்று டிசம்பர் 31 ஆம் திகதி இரவுக்கு முன்னதாக அதனை இணையத்தில் பதிவு செய்யவேண்டும்.
துப்பாக்கிகளின் விபரங்களை பதிவு செய்யும் SIA இணையத்தளமூடாக அவற்றை பதிவு செய்தல் கட்டாயமானதாகும். தவறும் பட்சத்தில் நள்ளிரவு 12 மணியுடன் அவற்றின் உரிமம் இரத்தாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஆயுதங்கள் பறிமுதலுக்கு உள்ளாகும்.
இணையத்தில் பதிவினை மேற்கொள்ளவிட்டால், அதனை வைத்திருக்கவோ, விற்பனை செய்யவோ, தோட்டாக்கள் வாங்கவோ அல்லது அவற்றை திருத்தவோ முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் இரண்டு மில்லியன் பேர் அனுமதி பெற்று துப்பாக்கிகள் வைத்திருக்கின்றனர். அவர்களில் 1.1 மில்லியன் பேர் வேட்டைக்காரர்களாவர்.
SIA இணையம் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அண்டு தோறும் ஆயுதங்களை பதிவு செய்துகொள்ளுதல் அவசியமாகும்.