மீண்டும் வீதிகளை முடக்க தயாராகும் உழவர்கள்.. வீடு திரும்பும் மக்களுக்கு சிமரம்!
31 மார்கழி 2024 செவ்வாய் 09:00 | பார்வைகள் : 823
ஜனவரி 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இல் து பிரான்ஸ் மாகாணத்தின் உள்வரும் வீதிகள் அனைத்தும் மிகவும் நெருக்கடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய நாள் உழவர்கள் வீதிகளை முடக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மீது கோபத்தில் இருக்கும் உழவர்கள், தங்களது உழவு இயந்திரங்களை வீதிகளில் நிறுத்தி போக்குவரத்தை முடக்கும் நூதன ஆர்பாட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக விடுமுறையை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் இல் து பிரான்ஸ் மக்களை வீதிகளிலேயே முடக்கும் முயற்சியினை அவர்கள் மேற்கொள்ள உள்ளனர்.
அதை அடுத்து, ஜனவரி 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அவர்கள் வீதிகளை முடக்க உள்ளனர். இதனை FNSEA-JA எனும் உழவர்கள் பாதுகாப்புச் சபை ஏற்பாடு செய்துள்ளது.
மறுநாள் பாடசாலைகள் மற்றும் வேலைகள் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் சிரமத்தை சந்திக்க உள்ளதாக அறிய முடிகிறது.