இளையோர் மத்தியில் மது அருந்தும் பழக்கம் அதிகரித்து உள்ளது அவதானம்.

31 மார்கழி 2024 செவ்வாய் 06:41 | பார்வைகள் : 6205
பிரான்சில் மது சம்மந்தப்பட்ட விளம்பரங்கள் பொதுவான ஊடகங்களில் ஓரளவுக்கு கட்டுப்படுத்த பட்டுள்ளது, அல்லது விளம்பரத்தின் முடிவில் அதன் ஆபத்தையும் கூறுகிறது. ஆனால் இளையோர் அதிகம் பயன்படுதுகின்ற சமூக வலைத்தளங்களில், கூறிப்பாக 'Instagram' மற்றும் 'TikTok' போன்றவற்றில் மது அருந்தும் பழக்கத்தை, அதன் பாவனையை ஊக்கப்படுத்தும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மிக அதிகமாக வலம்வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாணவர்கள் மத்தியில் மது அருந்துவதும், கூட்டாக வாரத்தில் ஒருமுறையேனும் சந்தித்து அரட்டை அடித்து மது அருந்துவது நாகரிகமான, மகிழ்ச்சியான செயல் என்றும் அதில் சேராதவர்கள் நாகரிகம் தெரியாதவர்கள் போன்றும், மது அருந்தாதவர்களை மாணவர்கள் மத்தியில் சேர்ப்பதில்லை என்பது போன்றும் மிக நுட்பமான மூளைச்சலவை செய்யும் விளம்பரங்கள் அதிகம் வருவதாக மேலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
EHESP நடத்திய ஆய்வின்படி, 15 வயது முதல் 21 வயதுடையவர்களில் 80% பேர் ஒவ்வொரு வாரமும் மதுபானங்களுக்கான விளம்பரங்களுக்கு ஆளாகிறார்கள். இது அவர்களை மது அருந்த ஊக்கப்படுத்திகிறது இதனால் கல்லூரிகளில் 6ம் வகுப்பு மாணவர்களில் 50% பேர் வாரத்தில் இரண்டு முறையேனும் மது அருந்துகிறார்கள் என்றும், இறுதி ஆண்டு மாணவர்களில் 20% பேர் தொடர்ந்து மது அருந்துகின்றனர் எனவும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1