soldes d'hiver : எப்போது ஆரம்பம்??
31 மார்கழி 2024 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 2587
குளிர்கால மலிவு விற்பனை அடுத்த வாரம் ஆரம்பமாக உள்ளது. ஆடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள், தளபாடங்கள் காலணிகள் என பல பொருட்கள் இம்முறை குளிர்கால மலிவு விற்பனையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.
ஜனவரி 8 ஆம் திகதி புதன்கிழமை முதல், பெப்ரவரி 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை இந்த soldes d'hiver மலிவு விற்பனை இடம்பெற உள்ளது. இந்த திகதி Lorraine மாவட்டத்துக்கும் Guadeloupe, Reunion, Polynesia.. போன்ற கடல்கடந்த நிர்வாகப்பிரிவுகளுக்கும் பொருந்தாது.
அதேவேளை, Guyana, Martinique மற்றும் Mayotte ஆகிய தீவுகளில் பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் ஆரம்பமாகும் அதே நாட்களில் ஆரம்பமாகும்.