68 உக்ரேனிய ட்ரோன்களை வீழ்த்திய ரஷ்யா
31 மார்கழி 2024 செவ்வாய் 12:28 | பார்வைகள் : 727
உக்ரேனின் 68 ட்ரோன்களை ஒரே இரவில் வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
மேற்கு ரஷ்யாவில் உள்ள Smolensk பிராந்தியத்தில் உக்ரேனிய ட்ரோன் தாக்கியதில் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக ஆளுநர் Vasily Anokhin தெரிவித்துள்ளார்.
அவர், "எண்ணெய் கிடங்கின் பிரதேசத்தில் உக்ரைனின் ட்ரோன்கள் விழுந்தன.
இதன் விளைவாக, எரிபொருள் கசிவு ஏற்பட்டது மற்றும் Fuel, Lubricantsயிலும் தீ தொடங்கியது.
சம்பவ இடத்தில் அவசர சேவைகள் செயல்பட்டு வருகின்றன.
அப்பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை" என்றார்.
மேலும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைனுக்கு வடக்கே 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பிராந்தியத்தில் 68 உக்ரேனிய ட்ரோன்கள் ஒரே இரவில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், பெலாரஸின் எல்லையை ஒட்டிய ஸ்மோலென்ஸ்க் பகுதியில் 10 ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.