பரிஸ் : நகை விற்பனையாளர் வீட்டில் கொள்ளை.. 200,000 யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் திருட்டு!!
31 மார்கழி 2024 செவ்வாய் 14:21 | பார்வைகள் : 1626
நகைகள் விற்பனை செய்யும் ஒருவரது வீட்டில் கொள்ளையிடப்பட்டுள்ளது. மொத்தமாக 200,000 யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிஸ் 8 ஆம் வட்டாரத்தின் Place de Clichy பகுதியில் உள்ள வீடொன்றில் இக்கொள்ளைச் சம்பவம் கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது. உரிமையாளர் கடந்த வியாழக்கிழமை வீடு திரும்பியிருந்த போது, அது சூறையாடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதில், வீடு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஆடம்பர கைக்கடிகாரங்களும் சிலவற்றை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
அதன் மொத்த மதிப்பு 200,000 யூரோக்கள் என தெரிவிக்கப்படுகிறது.