”அப்பாவித்தனங்களை கைவிடவேண்டும்!” - ஜனாதிபதி மக்ரோனின் புது வருட வாழ்த்து!!
1 தை 2025 புதன் 07:00 | பார்வைகள் : 1914
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு தனது புதுவருட வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
”இந்த ஆண்டு நாம் ஒன்றுமையாக செயற்பட்டு சாத்தியமில்லாது எதுவும் இல்லை என நிரூபித்துள்ளோம்”
என குறிப்பிட்ட ஜனாதிபதி, 2025 ஆம் ஆண்டில் நாம் ஒன்றுபட்ட, உறுதியான மற்றும் ஐக்கியமாக செயற்படவேண்டும். 2024 ஆம் ஆண்டில் ஒலிம்பிக்கை நிகழ்த்தியது போன்று, நோர்து-டேம் தேவாலயத்தை திறந்துவைத்தது போன்று நாம் வெற்றிகளை உருவாக்கவேண்டும்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்தோடு, “ஐரோப்பியர்கள் தங்களது அப்பாவித்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
நமக்கு ஒரு ஐரோப்பிய ரீதியிலான விழிப்புணர்வு, அறிவியல், அறிவுசார், தொழில்நுட்பம், தொழில்துறை விழிப்புணர்வு, விவசாயம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தேவை” எனவும் அவர் குறிப்பிட்டார்.