H-1B விசா முடிவில் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்
1 தை 2025 புதன் 11:16 | பார்வைகள் : 791
அமெரிக்காவில் H-1B விசாக்கள் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை என டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்தார்.
சமீபத்தில் இந்திய தொழில்முறை வேலைகளுக்கான H-1B விசா புதுப்பிப்பு செயல்முறை முதல் முறையாக அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவை விட்டு வெளியே செல்லாமல் வேலைகள் தொடர்பான விசாக்களை புதுப்பிக்க முடியும்.
இதனைத் தொடர்ந்து, H-1B விசா பயன்பாடு தொடர்பில் கடும் விவாதம் எழுந்த நிலையில், எலோன் மஸ்கின் முடிவுக்கு டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார்.
Mar-a-Lagoவில் தனது வருடாந்திர புத்தாண்டு ஈவ் பேஷில் டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவி மெளனியாவுடன் வந்தபோது செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ஏன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு H-1B விசா திட்டத்தை பகிரங்கமாக ஆதரித்தீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), "நான் என் மனதை மாற்றவில்லை.
நம் நாட்டில் மிகவும் திறமையான நபர்கள் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் உணர்கிறேன்.
எங்களுக்கு திறமையானவர்கள் தேவை, புத்திசாலிகள் நம் நாட்டிற்கு வர வேண்டும். மேலும் நிறைய பேர் வர வேண்டும்.
எங்களுக்கு முன் எப்போதும் இல்லாத வேலைகள் கிடைக்கப் போகிறது" என தெரிவித்தார்.