Paristamil Navigation Paristamil advert login

2024 : மகிழுந்து விற்பனை வீழ்ச்சி!!

2024 : மகிழுந்து விற்பனை வீழ்ச்சி!!

1 தை 2025 புதன் 11:48 | பார்வைகள் : 7021


கடந்த 2024 ஆம் ஆண்டில் பிரான்சில் மகிழுந்துகள் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வீழ்ச்சி 3.2% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், பிரான்சில் 2024 ஆம் ஆண்டில் 1,718,417 மகிழுந்துகள் பிரான்சில் பதிவு செய்யபப்ட்டுள்ளதாகவும், முந்தைய 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை வீழ்ச்சிய்டைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது., Plateforme de la filière automobile நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

Citroën, Fiat, Opel, Peugeot போன்ற பிரெஞ்சு மகிழுந்துகள் 7% சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்தித்திள்ளன. அவை மொத்தமாக 452,900 மகிழுந்துகளை விற்பனை செய்துள்ளனர்.

Dacia, Renault, Alpine போன்ற Renault குழுமத்தின் மகிழுந்துகள் 2.7% சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

விற்பனையான மகிழுந்துகளில் 42.8% சதவீதமானவை ’ஹைபிரிட்’ இயந்திரங்களை கொண்டவையாகும். 2023 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 33.5% சதவீதமாக இருந்தது.

மின்சாரத்தில் மட்டும் இயங்கும் மகிழுந்துகள் விற்பனையும் மிகச் சிறிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 298,525 மகிழுந்துகளும், 2024 ஆம் ஆண்டில் 291,143 மகிழுந்துகளும் விற்பனையாகியுள்ளன.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்