Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில்  கால்பந்தாட்ட மறுமலர்ச்சிக்கு  FIFA மற்றும் FFSL  ஆகியன வித்திட்டுள்ளன

இலங்கையில்  கால்பந்தாட்ட மறுமலர்ச்சிக்கு  FIFA மற்றும் FFSL  ஆகியன வித்திட்டுள்ளன

1 தை 2025 புதன் 13:27 | பார்வைகள் : 160


இலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியினர் 2024இல் சர்வதேச அரங்கில் வெளிப்படுத்திய ஒப்பற்ற ஆற்றல்கள் பாராட்டுக்குரியதாகும்.

சர்வதேச அரங்கில்  2024இல்  மிகவும் அவசியமான வெற்றிகளை ஈட்டி இலங்கை வரலாறு படைத்ததை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.

இந்த வெற்றிகளை அடுத்து சர்வதேச கால்பந்தாட்ட அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை ஐந்து இடங்கள் முன்னேறி 200ஆவது இடத்தை அடைந்துள்ளது.

மூன்று சர்வதேச போட்டிகளில் இலங்கை ஈட்டிய அற்புதமான வெற்றிகளுடன் 3 போட்டிகளை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டதன் மூலம் அதன் முன்னேற்றம் எத்தகையது என்பது புலப்படுகிறது.

தெற்காசிய கால்பந்தாட்ட  சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் மற்றைய 5 நாடுகள் இந்தளவு சிறந்த பெறுபேறுகளை கடந்த வருடம் ஈட்டவில்லை.

மிகவும் அற்புதமாக விளையாடிய இலங்கை, சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் பிரகாசமான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை இட்டுக்கொண்டுள்ளது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் (FFSL) தலைவர் ஜஸ்வர் உமரை சந்தித்த பீபா தலைவர் ஜியானி இன்ஃபன்டீனோ, இலங்கை கால்பந்தாட்டத்தின் வளர்ச்சியையும் அதன் பெரு முன்னேற்றைதயும்  பாராட்டினார்.

ஜஸ்வர் உமரின் தலைமையிலான இலங்கை கால்பந்தாட்ட விளையாட்டுத்துறை ஒரு வருடத்தில் புரிந்த சாதனைகள் குறித்து பீபா தலைவர் ஜியானி இன்ஃபன்டீனோ தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில்  திருப்தியை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் முதல் தடவையாக FIFA சர்வதேச  கால்பந்தாட்ட   தொடர் போட்டிகளையும்  FIFA நிதி ஆளுகை பட்டறையையும் வெற்றிகரமாக நடத்தியதற்காகவும் அவர் பாராட்டை வெளியிட்டார்.

மூலோபாய மேம்பாட்டு முயற்சிகள்

இலங்கையின் கால்பந்தாட்ட அபிவிருத்திப் பயணத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை FIFA மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. புதிய மைதானம் ஒன்றை நிர்மாணித்தல், இரண்டு பயிற்சி நிலையங்கனை புனரமைத்துதல்,  நாடு முழுவதும் சிற்றரங்குகளை அமைத்தல் ஆகியவை இந்த அபிவிருத்தித் திட்டத்தில் அடங்கும்.

இலங்கையை உலகத் தரம் வாய்ந்த கால்பந்தாட்ட விளையாட்டு மையமாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவுள்ளது. இது உலக அரங்கில் இலங்கையின் கால்பந்தாட்ட வளர்ச்சியை பறைசாற்றுவதாக அமையும்.

இது இவ்வாறிருக்க, கிராமப்புறங்களில் கால்பந்தாட்ட விளையாட்டை விரிவுபடுத்துவதற்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்  தலைவர் ஜஸ்வர் உமர் முன்னுரிமை அளித்துள்ளார், கால்பந்தாட்டம் 'ஏழைகளின் விளையாட்டு' என்பதை மாற்றி  'மக்களின் விளையாட்டாக' பரிணமிக்கச் செய்யும் நோக்கத்துடன் அவர் செயற்பட்டுவருகிறார்.  

இந்த நோக்கத்திற்காக, புதிய ஆண்டில் நாடளாவிய ரீதியில் பல போட்டிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. .

சுப்பர் லீக் மற்றும் சம்பியன்ஸ் லீக் ஆகிய இரண்டு பிரதான கால்பந்தாட்டப் போட்டிகளை புதிய வருட முற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் கால்பந்தாட்ட விளையாட்டுத்துறையை பூரணத்துவம் மிக்கதாக அடையச் செய்யும் வகையில் ஒரு புதிய கழக மட்ட மகளிர் லீக் தயாரிக்கப்பட்டுவருகிறது.

எதிர்காலத்திற்கான உத்வேகத்தை உருவாக்குதல்

சர்வதேச அரங்கில் 2024இல் ஈட்டப்பட்ட சிறந்த பெறுபேறுகளை அடுத்து பூரிப்பும் உற்சாகமும் அடைந்துள்ள ஜஸ்வர் உமர், பல்வேறு பிராந்திய மற்றும் இளைஞர் கால்பந்தாட்ட நிகழ்ச்சித் திட்டங்களை வெளியிடத் தயாராகி வருகிறார்.

இது கால்பந்தாட்ட விளையாட்டு  நிகழ்ச்சிகளில் திருவிழாக் கோலம் போன்ற சூழ்நிலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இத்தகைய நிகழ்ச்சிகள் இரசிகர்கள் மற்றும் குடும்பங்களை விளையாட்டின்பால் அதிகளவில் ஈர்க்கின்றன. அதிகரித்த முதலீடு மற்றும் பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், இலங்கையில் மிகவும்  கொண்டாடப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக கால்பந்தாட்டம் மாறுவது நிச்சயம்.

சர்வதேச அரங்கில் இலங்கை கால்பந்தாட்டம் முக்கிய இடத்தை அடைவதற்கு FIFA மற்றும் FIFA ஆகியவற்றுக்கு இடையிலான முழமையானதும் உறுதியானதுமான ஒத்துழைப்பு வழிவகுக்கிறது.

புதிய ஆண்டில் காலடி எடுத்துவைக்கவுள்ளள்ள இவ் வேளையில் 2024இல்  கால்பந்தாட்ட விளையாட்டில் குறிப்பாக சர்வதேச அரங்கில் கட்டியெழுப்பப்பட்ட உத்வேகமானது இலங்கை கால்பந்தாட்டத்தை மேலும் முன்னேற்றம் அடையச் செய்யும் என்பது உறுதி.