கீர்த்தி சுரேஷ் காதல் கதை!
2 தை 2025 வியாழன் 10:35 | பார்வைகள் : 368
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட கால காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை அண்மையில் மணமுடித்தார். இந்நிலையில் தனது காதல் கதையை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக நடிகை கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டியில், “ஆர்குட் சமூக வலைதளம் இருக்கும்போது அதன் வழியாக முதன் முதலில் பேச ஆரம்பித்தோம். ஒரு மாதம் பேசியிருப்போம். அதன்பிறகு ரெஸ்டாரன்ட் ஒன்றில் சந்தித்தோம். அப்போது நான் என்னுடைய குடும்பத்துடன் இருந்ததால் என்னால், ஆண்டனியிடம் பேச முடியவில்லை. ஆண்டனியை பார்த்து கண்ணை மட்டும் சிமிட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன்.
அதன்பிறகு அவரிடம், ‘உனக்கு தைரியம் இருந்தால் என்னிடம் புரபோஸ் செய்’ என்று கூறினேன். கடந்த 2010-ம் ஆண்டு முதன்முறையாக அவர் என்னிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். 2016-ல் தீவிரமாக இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம். அவர் எனக்கு கொடுத்த மோதிரத்தை நான் இன்றுவரை கழட்டவில்லை. அது என்னுடைய திருமணத்திலும் இருந்தது. அந்த மோதிரத்தை நீங்கள் என்னுடைய அனைத்து படங்களிலும் பார்க்கமுடியும்” என்றார்.