Paristamil Navigation Paristamil advert login

BPLயில் புதிய வரலாற்று சாதனை வங்காளதேச அணி பந்துவீச்சாளர்

BPLயில் புதிய வரலாற்று சாதனை வங்காளதேச அணி பந்துவீச்சாளர்

2 தை 2025 வியாழன் 12:25 | பார்வைகள் : 170


வங்காளதேச அணி பந்துவீச்சாளர் தஸ்கின் அகமது BPL தொடரில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

BPL எனும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி20 தொடர் வங்காளதேசத்தில் நடந்து வருகிறது.

டாக்கா கேப்பிட்டல் மற்றும் துர்பர் ராஜ்ஷாஹி அணிகளுக்கு இடையிலான போட்டியில் தஸ்கின் அகமது மிரட்டலாக பந்துவீசினார்.

4 ஓவர்கள் வீசிய அவர் 19 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதன்மூலம் BPL தொடரில் ஒரே இன்னிங்சில் அதிக விக்கெட்டுகள் எடுத்த முகமது ஆமிரின் சாதனையை முறியடித்தார். 2020யில் ஆமிர் 17 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எனினும், மலேசிய வீரர் சியஸ்ருல் இடரஸ் (Syazrul Idrus) சீனாவுக்கு எதிரான போட்டியில் 8 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தியதும், காலின் அக்கர்மென் 18 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தியதும் சர்வதேச அளவில் சாதனையாக உள்ளது.