Paristamil Navigation Paristamil advert login

அழகாக இருக்க ஈசியான வழிகள்

அழகாக இருக்க ஈசியான வழிகள்

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 13778


 இன்றைய கால கட்டத்தில் அழகை பாதுக்காக பெண்கள் படாதபாடு படுகிறார்கள். அழகை பாதுகாக்க, மேம்படுத்த பெண்கள் என்னவெல்லாமோ செய்கிறார்கள். கருப்பும் ஓர் அழகு தான் என்பதை மறந்துவிட்டு சிவப்பாக ஆக கிரீம்களை பயன்படுத்துகின்றனர். 

 
இயற்கை முறையில் அழகை பாதுகாப்பது எப்படி என்று பார்ப்போம் பெண்கள் என்று பீட்சா, பர்கர், பாஸ்தா என்று சாப்பிட்டு குண்டாக ஆக வேண்டாம். ஸ்லிம்மாகுகிறேன் என்ற பெயரில் பட்டினியும் கிடக்க வேண்டாம். மாறாக சத்தான உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட்டாலே நீங்கள் ஸ்லிம்மாகவும், ஃபிட்டாகவும் இருக்கலாம். 
 
தினமும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். அது உங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.தினமும் குறைந்தது 8 முதல் 10 டம்ப்ளர் வரை தண்ணீர் குடியுங்கள். இரவில் நன்றாக தூங்குவது உங்கள் அழகை பாதுகாக்க மிகவும் முக்கியம்.
 
சரியான தூக்கம் இல்லை என்றால் முகம் வாடி, கண்களைச் சுற்றி கருவளையம் வந்துவிடும். அதன் பிறகு அதுக்கு வேறு தனியாக கிரீம்கள் போடுவீர்கள். வெளியே சென்றுவிட்டு வந்தால் முகத்தை ஹெர்பல் ஃபேஸ்வாஷ் அல்லது கடலை மாவால் கழுவவும். 
 
கடலை மாவை நீரில் குழைத்து முகத்தில் தடவி ஊற வைத்தும் கழுவலாம் அல்லது வெறுமனே முகத்தில் தடவியும் கழுவலாம். வீட்டு வேலைகளை செய்வது நம் உடல் நலத்திற்கு தான் நல்லது. 
 
அதை வேலைக்காரியிடம் விட்டுவிட்டு நம் உடல் நலத்தை நாமே கெடுப்பானேன். முகம் பளப்பளப்பாக தேன் அல்லது பாலாடையை முகத்தில் பூசி அரை மணிநேரம் கழித்து கழுவலாம் தினமும் 10 பாதாம் பருப்பு சாப்பிடுவது சருமத்திற்கு மிகவும் நல்லது.

வர்த்தக‌ விளம்பரங்கள்