தென்கொரிய ஜனாதிபதியை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார்
3 தை 2025 வெள்ளி 14:16 | பார்வைகள் : 984
தென்கொரியாவின் அரசியல் குற்றப்பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதி யூன் சிக் இயோலை கைதுசெய்வதற்காக தென் கொரிய பொலிஸார் அவரது இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
20க்கும் மேற்பட்ட பொலிஸார் அவரது இல்லத்திற்குள் சென்றுள்ள நிலையில், வெளியில் பல பொலிஸார் காணப்படுவதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்படுகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் அவரை கைதுசெய்வதை தடுக்க முயல்கின்றனர்.
ஜனாதிபதி கைது தொடர்பில் நீதிமன்றம் அனுமதிவழங்கிய பிடியாணை சட்டபூர்வமற்றது என தெரிவிக்கும் ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் அதனை சவாலிற்குட்படுத்தப்போவதாக குறிப்பிட்டுள்ளனர்