47 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா!

4 தை 2025 சனி 07:01 | பார்வைகள் : 3598
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா 47 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
சிட்னியில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் கடைசி டெஸ்டில் இந்திய அணி 185 ஓட்டங்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல்அவுட் ஆனது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் வேகப்பந்து தாக்குதலில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
வெப்ஸ்டர் 57 ஓட்டங்களும், ஸ்டீவன் ஸ்மித் 33 ஓட்டங்களும் எடுக்க அவுஸ்திரேலியா 181 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா, நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பும்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் எனும் 47 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
இதற்கு முன்பு இந்தியாவின் பிஷன் சிங் 31 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த நிலையில், பும்ரா 32 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஆனால் இரண்டாம் நாள் ஆட்டத்தின் பாதியில் காயம் காரணமாக பும்ரா பாதியில் மருத்துவமனைக்கு சென்றார். இதனால் பும்ராவுக்கு பதிலாக கோஹ்லி அணியை தலைமை தாங்குகிறார்.
இரண்டாவது இன்னிங்ஸில் பும்ராவின் பந்துவீச்சு மிகவும் முக்கியம் என்ற நிலையில், அவர் காயமுற்று வெளியேறியது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1